விபத்துக்கள் ஏதேனும் நடக்குமோ என்ற பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில்

விபத்துக்கள் ஏதேனும் நடக்குமோ என்ற பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில்
X
வீரனார் குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்படுமா?
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை ஊராட்சி வரதராஜபுரத்தில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில், வீரனார் குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தை, அப்பகுதி பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது குளத்தின் அருகில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் கரையை விட சிமெண்ட் சாலை உயரமாக இருப்பதால், சாலையில் செல்பவர்கள் சாலையில் இருந்து குளத்தில் தவறி விழும் அபாய நிலை உள்ளது. மேலும், அப்பகுதியில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் இருப்பதால், குளத்தில் தவறி விழுந்து விபத்துக்கள் ஏதேனும் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் அப்பகுதி பொதுமக்கள் இருந்து வருகின்றனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வீரனார் குளத்தை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story