சிஎஸ்ஐ கல்லறைக்கு அருகில் வெளிநாட்டிற்கு கடத்தி செல்வதற்காக

X
நாகை கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரைப்பேட்டை புது தெருவில் உள்ள, சிஎஸ்ஐ கல்லறைக்கு அருகில், வெளிநாட்டிற்கு கடத்தி செல்வதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், நாகை கடற்கரை காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே போலீசார் சோதனை நடத்தியதில், 12 பிளாஸ்டிக் பெட்டிகளில், பதப்படுத்துவதற்காக தண்ணீரில் ஊற வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கிலோ கடல் அட்டைகள் இருப்பதை கண்டறிந்து, கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, நாகை கடற்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, பறிமுதல் செய்யப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகளை வனத்துறை வசம் ஒப்படைத்தனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

