பஸ்ஸில் செயின் திருட்டு - வழக்கு 

பஸ்ஸில் செயின் திருட்டு - வழக்கு 
X
8 மாதங்கள் பின்பு
கன்னியாகுமரி அருகே ராஜாக்கமங்கலம் துறை அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் சிலுவை மேரி (72). கடந்த 24.  7. 2024 அன்று இவர் கடியப்பட்டணம் - நாகர்கோவில் பஸ்ஸில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த ஏழரை பவுன் செயினை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலுவை மேரியின் கழுத்தில் கிடந்த செயினை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.       இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மாவட்ட எஸ்பி ஸ்டாலினை சந்தித்து சிலுவை மேரி  இது தொடர்பாக புகார் கூறினார். 8 மாதங்களுக்கு பின்பு நேற்று 22ஆம் தேதி கோட்டாறு போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story