கோவை: கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடு மற்றும் அதன் நுட்பங்கள் குறித்த பயிற்சி.
கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடு மற்றும் அதன் நுட்பங்கள் குறித்த பயிற்சி பகுதி நேரமாக வார நாட்களிலும் மற்றும் வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை கோவை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். பயிற்சிக்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கு வயது வரம்பு இன்றி அனைவரும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 15 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்பு உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் கோவை சாய்பாபா காலனி டாக்டர் அழகேசன் சாலையில் உள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story