கடலில் ஹைட்ரோ கார்பன், கனிம வளங்களை எடுக்கும் மத்திய அரசை கண்டித்து

X
கடலில் ஹைட்ரோ கார்பன் மற்றும் கனிம வளங்களை எடுக்கும் மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து, நாகை மீன்பிடி துறைமுகம் முன், தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் ஜீவானந்தம், சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமணி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கடலில், ஹைட்ரோ கார்பன், கனிம வளங்களை எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கடலையும், மீனவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். முடிவில், மாவட்ட பொருளாளர் காளியப்பன் நன்றி கூறினார்.
Next Story

