ராமநாதபுரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் கடல் வளம் மற்றும் மீன் வளர்ப்பிற்கு கேடு விளைவிக்கும் வகையிலும் பாரம்பரிய மீனவர்களை மீன்பிடி தொழிலை விட்டும் அவர்களின் வாழ்விடங்களை விட்டும் வெளியேற்றும் வகையிலும் கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் எரிவாயு மற்றும் பெட்ரோலிய எண்ணை கிணறுகள் அமைத்திட மத்திய அரசு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதை கண்டித்தும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் ஆன நாசக்கார இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்ட கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் முத்துப்பேட்டை கடற்கரை பகுதியில் கடலில் இறங்கி மீன் பிடி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் மேலும் படகுகள் முழுவதும் கருப்புக்கொடிகளை கட்டி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர் மீனவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறுகள் அமைப்பதால் மீன்வளம் முற்றிலும் பாதிப்படையும், மீனவர்கள் மீன்பிடித் தொழிலை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்படும் ஆகையால் இந்தத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் ஏராளமான மீனவர்கள் மற்றும் பெண்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்ட கோஷம் எழுப்பினர்
Next Story

