வார விடுமுறை நாளை ஒட்டி உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் குறைந்து கானப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.....
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா தலங்களில் வரைபடத்தில் இடம்பெற்றுள்ள மாவட்டமாகும் மாவட்டத்திற்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றன இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, படகு இல்லம் ,தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனர் இந்நிலையில் வார விடுமுறை நாளை ஒட்டி இன்று உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நிலவும் இதமான கால நிலையையும் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண ரோஜா மலர்களையும் கண்டு ரசித்தும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து குடும்ப மற்றும் நண்பர்களுடன் உற்சாகமடைந்தனர் இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் என்பது சற்று குறைந்தே காணப்படுகிறது
Next Story




