உள்ளாவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்த கோரிக்கை

உள்ளாவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
X
உள்ளாவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூரில் இயங்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளி வளாகத்திற்கு இதுவரை சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. பள்ளி வளாகத்தையொட்டி அப்பகுதிக்கான கான்கிரீட் சாலை உள்ளது.மாணவ - மாணவியர் விளையாட்டு நேரங்களில், பள்ளி வளாகத்தையொட்டி உள்ள சாலையை பயன்படுத்தும் நிலை உள்ளது. அம்மாதிரியான நேரங்களில் மாணவர்கள் விபத்திற்குள்ளாக வாய்ப்பு உள்ளது.பள்ளி விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர், பள்ளி வளாகத்திற்குள் புகுந்து, சமூக விரோத செயல்பாட்டிற்கான இடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும், பள்ளி வளாகத்தில் பராமரிக்க முயலும் மரக்கன்றுகள் போன்றவையும் சுற்றுச்சுவர் இல்லாததால், அப்பகுதி கால்நடைகளுக்கு இரையாகின்றன. எனவே, உள்ளாவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story