ராசிபுரம் அருகே புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பார்வையிட்டார்.

X

ராசிபுரம் அருகே புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பார்வையிட்டார்.
ராசிபுரம் அருகே புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பார்வையிட்டார். பேருந்து நிலையம் பொதுமக்களின் பயனிற்காக இருக்க வேண்டும் தனிநபரின் பயனிற்காக இருக்கக் கூடாது, பேருந்து நிலையத்திற்கு எதிராக தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பேட்டி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தற்போது செயல்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் நகர் பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அணைபாளையம் பகுதியில் சுமார் ரூ.10.58 கோடி மதிப்பீட்டில் புதிதாக பேருந்து நிலையத்திற்கு பூமி பூஜை செய்யப்பட்டு,பேருந்து நிலையம் அமைய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர்,அமைப்பினர் மற்றும் வணிகர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் புதிதாக அமையுள்ள பேருந்து நிலைய இடத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பார்வையிட்டு கட்சி நிர்வாகிகளிடம் பேருந்து நிலையம் மற்றும் அதன் செயல்பாடுகள், குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையம் பொதுமக்களுக்கு எவ்வித பயனும் இல்லாமல்,பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. பேருந்து நிலையம் என்பது பொதுமக்களின் பயனுள்ளதாக இருக்க வேண்டும்,தனிநபரின் பயனிற்காக இருக்கக் கூடாது. புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என பேட்டியளித்தார்..
Next Story