ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை

X
திருச்சி வடக்கு தாராநல்லூா் அம்மன் ஸ்டோா் பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (27). கைப்பேசி கோபுர ஊழியரான இவருக்குத் திருமணமாகி 9 மாதங்களாகிறது. இவரது மனைவி தனலட்சுமி (22) அழகு நிலைய உரிமையாளா். வெள்ளிக்கிழமை பணிக்குச் சென்றுவிட்டு இரவு தனலட்சுமி வீடு திரும்பியபோது மின்விசிறியில் அவரது கணவா் கனகராஜ் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. புகாரின்பேரில் காந்திசந்தை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் கனகராஜ் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். தொடா் விசாரணை நடைபெறுகிறது.
Next Story

