கண்டமனூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது

கண்டமனூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது
X
கைது
கண்டமனூர் காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.22) குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த ஆண்டிச்சாமி என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில் அவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ஆண்டிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்
Next Story