நாகர்கோவிலில் ரயிலில் ஊழியர்கள் மோதல் 

நாகர்கோவிலில் ரயிலில் ஊழியர்கள் மோதல் 
X
4 பேர் கைது
கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்புருகாருக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக தூரம் பயணிக்கும் ரயில் இதுவாகும். நேற்று மாலை 5: 25-க்கு  இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது. அப்போது இந்த ரயிலில் இருந்த கேட்டரிங் ஊழியர்களுக்கும், பராமரிப்பு பணியாளர்களுக்கு மிடையே தகராறு ஏற்பட்டது.       மாறி மாறி வாக்குவாதம் ஏற்பட்டு ரயிலுக்குள் வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த ரயில் மாலை 5:45க்கு நாகர்கோவில் சந்திப்பு முதல் பிளாட்பாரத்திற்கு வந்தது.  பின்னர் ரயில் புறப்பட்டது. ஆனாலும் ரயில் ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஓயவில்லை. மாறி மாறி அடிதடி நீடித்துள்ளது.      இதை தொடர்ந்து ரயில் புறப்பட்ட சில வினாடிகளில் அபாய சங்கிலியை பிடித்து ஊழியர்கள் நிறுத்தினர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள், போலீசார் சென்று விசாரித்த போது ஊழியர்களிடையே  ஏற்பட்ட மோதல் சம்பவம் தெரிய வந்தது.       இதையடுத்து மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த நான்கு பேரை விசாரணைக்காக போலீஸ் சார் அழைத்து சென்றனர். இவர்கள் அஸ்ஸாம், மேற்குவங்கம், பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் ஆவார்கள். வழக்கு பதிவு பின் இவர்களை எச்சரித்து போலீசார் ஜாமீனில் அனுப்பி வைத்தனர்.
Next Story