பாரதிய ஜனதா கட்சியின் மண்டல நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் மண்டல நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்
X
பாரதிய ஜனதா கட்சியின் மண்டல நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் மண்டல நிா்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இதில், தெற்கு மண்டல பொதுச்செயலாளர் ஜெயராமன், மண்டல பொதுச் செயலாளர் பாலகுமார், மண்டல துணைத்தலைவர்கள் சங்கரலிங்கம், கார்த்திகை மீனா, ராமலட்சுமி, செல்வம், அருண்பாபு, மண்டல செயலாளர்கள் முத்துராஜ், முத்துச்சாமி, ஜெயசித்ரா, மண்டல பொருளாளர் சண்முகநாதன் ஆகியோர் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Next Story