தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
X
தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை பனையூர் பகுதியிலுள்ள தனது வீட்டின் முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டார். பாஜக முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் பாஜக பிரமுகர் காசிலிங்கம் தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
Next Story