ஒலி, ஒளி, அமைப்பினர் நகர் முழுதும் மின் அலங்கார ஆராதனை, நடந்தது.
Komarapalayam King 24x7 |23 March 2025 9:19 PM ISTகுமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஒலி, ஒளி, அமைப்பினர் நகர் முழுதும் மின் அலங்கார ஆராதனை, நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில் மகா குண்டம் நிகழ்ச்சி, திருக்கல்யாணம், தேரோட்டம், வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது. நகரின் ஒலி, ஒலி அமைப்பாளர்கள்.கல்யாண ஸ்டோர், மேடை அலங்காரம் செய்வோர், தெய்வங்களின் வேடங்கள் அமைக்க ஆடைகள் வாடகைக்கு விடுபவர்கள், மெஸ் வைத்து தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து மின் அலங்கார ஆராதனை நடத்தினர். 20க்கும் மேற்பட்ட இடங்களில் மேடையமைத்து பல்வேறு விதமான தெய்வ அலங்காரங்கள், பக்தி பாடல்களுக்கு நடன நிகழ்ச்சிகள், பிரபல மேடைக்கலைஞர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடந்தன. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து, காளியம்மன், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. ராஜம் தியேட்டர் முதல் நகராட்சி அலுவலகம் வரை சுமார் இரண்டு கி.மீ. தூரத்திற்கு நகர் முழுதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் சாலையின் இருபுறமும் கடலென திரண்டு வந்து, தெய்வங்களின் அலங்காரங்களை கண்டு வணங்கி சென்றனர். குமாரபாளையம் போலீசார் போக்குவரத்து சீர் படுத்தினர்.
Next Story



