திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு
இந்த மாதம் ரமலான் மாதம் என்பதால் ஆங்காங்கே ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஜாமியா பள்ளிவாசல் என்கின்ற பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிநகர திமுக சார்பாக நடைபெற்றது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி,திருச்செங்கோடு நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசும்போது இஸ்லாமியர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருமா அரசு இந்த திமுக அரசு எனக் கூறினார் திருச்செங்கோடு சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன திருச்செங்கோட்டில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டுள்ளது என கூறினார் இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரிடம் தங்கள் ஜாமியா பெரிய பள்ளிவாசல் பகுதிக்கு உட்பட்டவர்கள் உயிரிழந்தால் அவர்களது உடலை கொண்டு செல்லும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது ஜாதி மத பேதம் இல்லாமல் அனைவரும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் பங்கேற்ற அனைவருக்கும் நோன்பு கஞ்சி, பழச்சாறு, உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்நகர திமுக நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story