எம்.பி க்கு நன்றி தெரிவித்த ஆரணி அரிசி ஆலை உரிமையாளர்கள்.

X

பாராளுமன்றத்தில் 25கிலோ அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்ய வேண்டும் என்று ஆரணி எம்.பி பேசியதற்காக ஆரணி அரிசி ஆலை உரிமையாளர்கள் அவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
ஆரணி பாராளுமன்றத்தில் 25கிலோ அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்ய வேண்டும் என்று ஆரணி எம்.பி பேசியதற்காக ஆரணி அரிசி ஆலை உரிமையாளர்கள் அவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அரிசி விலை ஏற்றம் தடுப்பதற்காக ஏழை மக்களின் நலன் கருதி 25 கிலோ அரிசி கொண்ட பைக்கு ஜிஎஸ்டி விதிக்கக்கூடாது என்று பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த ஆரணி எம்.பி, எம்.எஸ்.தரணிவேந்தனை ஆரணி நெல், அரிசி வியாபார சங்கத்தினர் நேரில் சென்று நன்றி தெரிவித்தனர். இதில் ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன் ஆரணி நெல் அரிசி வியாபார சங்கத் தலைவர் பாபு, செயலாளர் ஸ்ரீமான், பொருளாளர் குப்புசாமி, அரிசி ஆலை உரிமையாளர்கள் நேமிராஜ், வி.பி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படச்செய்தி. பாராளுமன்றத்தில் 25கிலோ அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்ய வேண்டும் என்று ஆரணி எம்.பி பேசியதற்காக ஆரணி அரிசி ஆலை உரிமையாளர்கள் அவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Next Story