அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்காக பதிக்க வைத்த இந்த நபர் கைது

மங்களமேடு காவல்துறையினர் அதிரடி வேட்டை
காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை, மற்றும் லாட்ஜ் பரிசோதனை நடைபெற்றது. இதன் மூலம் மங்களமேடு உட்கோட்டம், குன்னம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர் குன்னம் (ஏ எம் ஆர்) லாட்ஜில் பரிசோதனை செய்ததில் அரியலூரை சேர்ந்த, செல்லக்கண்ணு (32/25) த/பெ செல்லமுத்து, தெற்கு அண்ணா நகர், பொய்யாதநல்லூர் கிராமம், அரியலூர் மாவட்டம் என்பவர் லாட்ஜ்யில் வைத்து இருந்த பெட்டியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்திருந்தார். மேற்படி எதிரியிடம் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்களை கைப்பற்றி, குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணகுமார் மேற்படி எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 1.ஹான்ஸ் (15-கிலோ), 2.கூல்லீப் (2-கிலோ)மற்றும் 3.விமல் பாக்கு (3-கிலோ) மற்றும் மொத்தம் - 20 கிலோ, அடங்கிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story