நடைமுறை தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார் - கார்த்திசிதம்பரம்

நடைமுறை தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார் - கார்த்திசிதம்பரம்
X
திருச்சி விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிதம்பரம் பேட்டி
சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக முதல்வரின் இந்த கூட்டத்தை முழுமையாக வரவேற்கின்றேன். ஜனத்தொகை அடிப்படைகள் மறு சீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் குறையும் 888 ஆக உயர்த்தினார்கள் என்றால்தமிழகத்தில் சீட் கூடலாம் ஆனால் வடநாட்டில் அதிக அளவில் கூடும். அதே அளவுகோலில் கூட்டினால் மூன்றில் ஒரு பங்காக மாறிவிடுவோம். இது தென்னகத்தை வஞ்சிக்கும் செயல். இன்று நடைபெற்ற கூட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு இதே நிலை தொடர வேண்டும் இந்தியாவினுடைய மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை தொடர வேண்டும் என்று யோசனை என்னை பொறுத்தவரை பொருத்தமான யோசனை. 543 இருக்கின்ற நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பேச நேரம் கிடைப்பதில்லை 340 வரை சேர்த்தால் பேச முடியாது, விவாதம் பண்ண முடியாது அது கூடி கலைகிற பெரிய கூட்டமாக ஆகிவிடும். பெரிய பாராளுமன்றம் இருப்பதால் இன்னும் ஜனநாயகம் சிறப்பாக இருக்கிறது, இன்னும் விவாதம் பண்ணலாம் என்று நினைப்பது தவறு நேரம் பத்தாது. மேதாட்டிற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் கூப்பிடாத முதல்வர் இதற்கு கூப்பிட்டாரே என்ற அண்ணாமலையின் கேள்விக்கு முல்லைப் பெரியாருக்கும், மேகதாட்டுக்கும் பஞ்சாப் முதல்வரை கூப்பிட முடியாது எது எதுக்கு என்னென்ன நடைமுறை என்பதை தெரியாதவர்கள் தான் இதை பற்றி பேசுவார்கள். தொகுதி வரையறை என்பது இந்தியாவை பாதிக்கக் கூடியது. குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்களில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படப்போகிறது அரசியல் நிலைப்பாட்டை மாற்றக்கூடிய நிலைக்காக இவர்களை கூப்பிடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஓரங்கட்டப்படுகிறார்கள் தமிழகத்தில். பாரதிய ஜனதா கட்சியுடன் எந்த ஒரு கட்சியும் கூட்டணி வைத்துக் கொள்ளாது அதனுடைய இந்துத்துவா கொள்கைகளை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மூன்றாவது மொழியை கட்டாய பாடமாக்குவது தமிழகம் ஏற்றுக்கொள்ள தேவையில்லை. எந்த ஒரு இந்தி பேசும் மாநிலத்திலாவது எந்தெந்த மூன்று மொழிகள் கற்றுக் கொள்ளப்படுகிறது என்பதை இந்திய அரசாங்கம் வெள்ளை அறிக்கை விட வேண்டும். இல்லையென்றால் வக்காலத்து வாங்கும் தமிழக பாஜக வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். தமிழகத்திற்கு வரும் இந்தி பேசும் மக்கள் ஆத்திச்சூடியை, திருக்குறளையும் படித்துவிட்டா வருகிறார்கள். தேவைக்கு ஏற்றார் போல அவர்கள் கூடிய கற்றுக் கொள்கிறார்கள் தமிழகத்திலிருந்து வடநாட்டு செல்லும் மக்கள் இந்தி பேசுகின்ற மக்களோடு தான் பழக வேண்டும் நிலை தள்ளப்பட்டால் அவர்கள் அந்த மொழியை கற்றுக் கொள்வார்கள் எந்த மொழியையும் கட்டாயமுடியாக தமிழகத்தில் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது மொழி திணிப்பாக பார்க்க முடியாது இது கலாச்சார பிடிப்பாக தான் பார்க்க வேண்டும். விவசாயிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை வழங்க வேண்டும். இதுதான் அனைத்து கட்சியும் கேட்டு வருகின்றனர் ஆனால் இதில் பாரதி ஜனதா கட்சியினர் விடாப்படியா இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை தான் நடத்த வேண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது. அடக்கு முறையை பாய்ச்சுவதில் நியாயம் கிடையாது. தமிழகத்தில் கூலிப்படை கொலை கொஞ்சம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கூலிப்படை கொலையை அரசு ஆராய்ந்து யார் அந்த கூலிப்படை யார் ஏவுகிறார்கள் என்பதை அதை அறிந்து கொள்ள வேண்டும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத்துறை கொஞ்சம் வேகமாக ஒவ்வொரு மாநிலத்தில் செயல்படும் என்பது அவரது பேட்டன் அரசாங்கத்தின் உண்மை நிலை என்ன என்பது அவர்கள் அறிக்கை விட்ட பின்னர் அரசு மறு அறிவிப்பை விட்டு தான் பார்க்க முடியும் உண்மை நிலை என்ன என்று இன்றைக்கு கூற முடியாது. தேர்தல் வரும் போதெல்லாம் அந்தந்த மாநிலத்தில் அமலாக்கத் துறையினர் ஆக்டிவாக செயல்படுவது வாடிக்கையாக தான் உள்ளது. இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது காங்கிரஸ் கூட்டணி இந்திய அளவில் தலைமை தங்குகிறது கூட்டணி வலுவாக உள்ளது சில கருத்து வேறுபாடுகள் உள்ளது அது சரியாகிவிடும் என தெரிவித்தார்.
Next Story