மின் கம்பியில் உரசியதில் மினி லாரியில் ஏற்றி வந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது

X
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் விருதாச்சலத்தில் இருந்து, மினி லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு நேற்று அயோத்தியாப்பட்டணத்திற்கு வந்தார். காரிப்பட்டி அருகே சர்க்கார் நாட்டாமங்கலம் பகுதியில் வந்தபோது சாலையின் குறுக்கே தாழ்வாக தொங்கிய உயர் அழுத்த மின் கம்பி மீது, வைக்கோல் உரசி தீப்பிடித்து கொண்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரன் மினி லாரியில் இருந்த வைக்கோலை கீழே கொட்டினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாழப்பாடி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியின் பின்பகுதி மற்றும் வைக்கோல் தீயில் எரிந்்து சேதமானது. இந்த தீவிபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

