தலைக்குப்புற கவிழ்ந்த வேன்

X
கும்பகோணத்தை சேர்ந்தவர் கிஷோர், 47; டிரைவர். இவர், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த 18 பேரை வேனில் அழைத்துக்கொண்டு, நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக காஞ்சிபுரம் நோக்கி சென்றார். பகல் 11:20 மணியளவில், உளுந்துார்பேட்டை அடுத்த சிறுத்தனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது வேன் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பட்டை இழந்த வேன், சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.விபத்தில் வேனில் இருந்த வீரய்யன் மனைவி குணமல்லி, 42; கோபிநாத், 40; ஜெயராம் மனைவி காந்தலட்சுமி, 36; முரளி மனைவி கோகிலா, 36; உட்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story

