ராமநாதபுரம் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் சட்டமன்ற உறுப்பினர் குடியரசு துவக்கி வைத்தார்
ராமநாதபுரத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கும் நிகழ்வில் பேருந்து நிலையத்தில் வைத்து பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதிக அளவில் மக்கள் கூடியதால் தென்னங்கன்றை வாங்க பொதுமக்கள் முண்டி அடித்ததோடு ஒன்றுக்கு ஐந்தாக தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறியது. ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை இடை நில்லா பேருந்து கோயம்புத்தூர் புதிய வழித்தட பேருந்து உச்சிப்புளி இயற்கை எரிவாயு பேருந்து என நான்கு பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இதனை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக குறைந்த அளவில் தென்னங்கன்றுகள் வைக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்ட நிலையில் அதிக அளவில் பொதுமக்கள் திடீரென குவிந்து ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்து தென்னங்கன்றுகளை நான்கு ஐந்தாக கொத்துக்கொத்தாக அள்ளிச் சென்றனர். இதன் காரணமாக தென்னங்கென்றை ஒருவருக்கொருவர் எடுத்துக் கொள்வதில் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்கப்பட்டது.
Next Story



