பைக்குகள் மோதல்: வாலிபர் பலி

X
சின்னசேலம் அடுத்த வி.பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 35; இவர், நேற்று மாலை தனது பைக்கில் சின்னசேலம் நோக்கி கூகையூர் சாலையில் உள்ள தனியார் ரைஸ் மில் அருகே சென்றார். அப்போது, கடலுார் மாவட்டம், வேப்பூரை சேர்ந்த வேலுசாமி, 34; என்பவர் ஓட்டி வந்த பைக், சண்முகம் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், படுகாயமடைந்த சண்முகம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வேலுசாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story

