மேம்பாலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்

மேம்பாலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்
X
பார்வதிபுரம்
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேம்பாலம் உள்ளது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கட்டப்பட்ட இந்த பாலத்தின் உள்ள தூண்களில்  போஸ்டர்கள் ஒட்டும் கலாச்சாரம் நடந்து வருகிறது.      அரசியல் கட்சிகள், கண்டன போஸ்டர்கள், விழா போஸ்டர்கள் என பல்வேறு போஸ்டர்கள் பாலத்தின் தூண்களில் ஒட்டப்படுகிறது. இவை பாலத்தின் அழகை குறைக்கிறது. அதேபோல் போஸ்டர்களை பயணிகள் படிக்க திரும்பினால் கவனம் சிதறி  விபத்துகள் ஏற்படும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.        இந்த நிலையில் குழித்துறை மேம்பாலம்  பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதியவும், அபராதமும் விதிக்கப்பட்டது. இதை போன்று பார்வதிபுரம் மேம்பால தூண்களில்  ஓட்டப்பட்ட போஸ்டர்கள் ஊழியர்களை வைத்து அப்புறப்படுத்தினர். இந்த பணியில் ஐந்துக்கும்  மேற்பட்ட ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.       மேலும் போஸ்டர்கள் ஒட்டப்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story