பைக்கில் இருந்து விழுந்த பெண் சாவு

பைக்கில் இருந்து  விழுந்த பெண் சாவு
X
தக்கலை
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷெர்லின்  மனைவி ரானா (45). இவர்களுக்கு பெரின் (24) என்ற மகனும் , ஒரு மகளும் உள்ளனர். சம்பவ தினம் மாலையில் தக்கலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள மகன் பெரினும் தாயார் ரானாவும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை பெரின்  ஓட்ட தாயார் பின்னால் அமர்ந்திருந்தார்.       கடமலைக்குன்று சிஎஸ்ஐ சர்ச் அருகே செல்லும்போது ரானா  நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.       பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்த பலனின்றி ரானா நேற்று உயிரிழந்தார். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story