வாணியம்பாடியில் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மிதிவண்டியை திருடிச்சென்ற நபர்

வாணியம்பாடியில் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மிதிவண்டியை திருடிச்சென்ற நபர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மிதிவண்டியை திருடிச்சென்ற நபர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கொல்லத்தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது ரியான், இவர் தனது மகனுக்காக வாங்கிய மிதிவண்டியை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த போது, முகமது ரியான், வீட்டின் அருகே வந்த நபர் ஒருவர் நீண்ட நேரம் நோட்டமிட்டு, முகமது ரியான் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மிதிவண்டியை திருடிச்சென்றுள்ளான், பின்னர் முகமது ரியான் வீட்டின் வெளியே வந்து பார்த்த போது, அங்கு நிறுத்தி வைத்திருந்த மிதிவண்டி காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நபர் ஒருவர் நீண்ட நேரம் நோட்டமிட்டு மிதிவண்டியை திருடிச்செல்வது தெரியவந்துள்ளது.. மேலும் அந்நபர் மிதிவண்டியை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
Next Story