பெண்ணை மிரட்டியவர் மீது வழக்கு

X
நாகர்கோவில் இடலாக்குடி பகுதி சேர்ந்தார் பாமா (40). இவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் நாகராஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அவரை பிரிந்து தனியாக வசித்து வந்தேன். அப்போது நாகர்கோவில் அலெக்சாண்டிரா பிரஸ் ரோட்டில் உள்ள ஒரு டெய்லர் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அந்த கடையில் இருந்த ஐசக் ராபர்ட்சன் என்பவரிடம் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் அவர் இரண்டாவது என்னை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தனியாக டெய்லர் கடை நடத்தினேன். சமீபகாலமாக என்னை சந்திப்பதை ஐசக் ராபர்ட்சன் நிறுத்திவிட்டார். வீட்டிற்கு வருவதில்லை. இது சம்பந்தமாக அவரிடம் கேட்டபோது என்னை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்து உள்ளார். தற்போது ஆதரவு இல்லாமல் உள்ளேன். இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகார் என் பேரில் கோட்டார் போலீசார் தலைமையில் விசாரணை நடத்தி, ஐசக் ராபர்ட் சன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story

