திருச்செந்தூரில் கரை ஒதுங்கும் கடல் முள்ளெலிகள்

திருச்செந்தூரில் கரை ஒதுங்கும் கடல் முள்ளெலிகள்
X
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமான கடல் முள்ளெலிகள் கரை ஒதுங்கி வருகின்றன.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமான கடல் முள்ளெலிகள் கரை ஒதுங்கி வருகின்றன. கடல் முள்ளெலிகள் சிறிய கூா்மையான முள்கள் கொண்ட, கோள வடிவம் உடையவை. கடல் வாழ் விலங்கினமான இவை, கடல் ஊமத்தை என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றின் உடலில் உள்ள முள்களுக்கு ‘மூராங்குச்சி’ என்ற பெயரும் உண்டு. இந்த மூராங்குச்சிகளை சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்த முடியும். கடந்த சில நாள்களாக திருச்செந்தூா் கடற்கரையில் ஏராளமான கடல் முள்ளெலிகள் கரை ஒதுங்கி வருகின்றன. அவற்றை கடற்கரை பாதுகாப்பு குழுவினா் பிடித்து நடுக்கடலில் விடுகின்றனா்.
Next Story