திருச்செந்தூர் கோவிலில் அவசர கதவு அமைக்க வேண்டும்

திருச்செந்தூர் கோவிலில் அவசர கதவு அமைக்க வேண்டும்
X
திருச்செந்தூர் கோவிலில் தரிசன வரிசைகளில் ஆங்காங்கே அவசர கதவு அமைக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் தரிசன வரிசைகளில் ஆங்காங்கே அவசர கதவு அமைக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது தரிசன பாதையில் சென்று பார்வையிட்டோம். இதில் சில குறைபாடுகளை கண்டோம். பொது தரிசன பாதையில் உள்ள கழிப்பிடங்கள் சுத்தம் இல்லாமல் உள்ளது. அதனை கூடுதல் பணியாளர்கள் நியமித்து சரி செய்ய வேண்டும். பொது தரிசன வரிசை மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசைகளில் ஆங்காங்கே அவசர கதவு (எமர்ஜென்சி கேட்) அமைக்க வேண்டும். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தர்களை மீட்க முடியும். உள்ளூர் பக்தர்களுக்கு தடையின்றி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்காமல் நல்ல தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். அவர்களை உதாசீன படுத்த கூடாது. திருச்செந்தூர் கோவிலில் இரவு 9 மணி வரை பூஜை காலங்கள் நடக்கும் வரை பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். இரவு 7 மணிக்கே பக்தர்களுக்கு தடை செய்வதை தவிர்க்க வேண்டும். திருச்செந்தூர் உள்ளிட்ட பெரிய கோவில்களில் பக்தர்கள் சேவையை பிரதானமாக கொண்டு செயல்பட வேண்டும். அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதிலேயே குறியாக இருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், நெல்லை கோட்ட பொறுப்பாளர் சக்திவேலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story