வாணியம்பாடி அருகே பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

வாணியம்பாடி அருகே பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
X
வாணியம்பாடி அருகே பள்ளி மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு பள்ளியில் பணியாற்றும், (பொறுப்பு) தலைமையாசிரியர் மாணவர்களை தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாக கூறி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள புல்லூர் ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியராக பணியாற்றும் வெங்கடேசன் என்பவர் பள்ளி மாணவர்களை அடிப்பது, தகாத வார்த்தைகளால் திட்டுவதாக, இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தால், தேர்ச்சி அடைய செய்யமாட்டேன் என மிரட்டுவதாகவும், மேலும் உயர் அதிகாரிகள் பணிநிறைவு நாளிற்காக மாணவர்களிடையே பலமுறை பணம் பெறுவதாக உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மாணவர்களின் பெற்றோர்கள், தலைமையாசிரியர் வெங்கடேசனை கண்டித்து அரசு நடுநிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர்.. அதனை தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திம்மாம்பேட்டை காவல்துறையினர் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் முற்றுகைபோரட்டத்தை கைவிட்டு மாணவர்களின் பெற்றோர்கள் அங்கிருந்து சென்றனர்.. மேலும் தலைமையாசிரியர் மீது மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர்..
Next Story