பாலாற்று வழிக்கான சாலை சீரமைக்க வலியுறுத்தல்

பாலாற்று வழிக்கான சாலை சீரமைக்க வலியுறுத்தல்
X
புளியம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, அப்பகுதி பாலாற்றங்கரை வரையிலான சாலையை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில், புளியம்பாக்கம் கிராமம் உள்ளது. புளியம்பாக்கம் பாலாற்றங்கரையின் மற்றொருபுரத்தில், அங்கம்பாக்கம் கிராமம் உள்ளது.அங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தோர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவர பாலாற்று படுகையை கடந்து, பாலாற்றங்கரை முதல், புளியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் வரையிலான சாலை வழியை பயன்படுத்துகின்றனர். மேலும், புளியம்பாக்கம் பாலாற்றங்கரையோர குடியிருப்பு வாசிகளும் அச்சாலை வழியை பயன்படுத்தி, வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இச்சாலை சில ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகி வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர். எனவே, புளியம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, அப்பகுதி பாலாற்றங்கரை வரையிலான சாலையை சீர் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கம்பாக்கம் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story