முதல்வர் பிறந்த நாள் முன்னிட்டு திமுக சார்பில் இன்னிசை பட்டிமன்றம்.

ஆரணி அண்ணாசிலை அருகில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சன் டிவி, விஜய் டிவி பேச்சாளர்கள் பங்கேற்ற இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது.
ஆரணி, ஆரணி அண்ணாசிலை அருகில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சன் டிவி, விஜய் டிவி பேச்சாளர்கள் பங்கேற்ற இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. இப்பட்டிமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி மாநில வளர்ச்சிக்கா, மகளிர் வளர்ச்சிக்கா என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் நடுவராக கல்பாக்கம் ரேவதி கலந்துகொண்டார். இதில் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார். ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டிமன்றத்தினை துவக்கி வைத்தார். மேலும் இதில் திமுக ஆட்சியில் மாநில வளர்ச்சிக்கே என ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் மகளிர் வளர்ச்சிக்கே என்றும் பேசினர். மேலும் இதில் செய்யார் எம்எல்ஏ ஜோதி, முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், தொகுதி செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்டதுணைசெயலாளர் ஜெயராணிரவி, மாவட்டபொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் எம்.சுந்தர், மாமது, மோகன், கண்ணமங்கலம் பேரூராட்சிசெயலாளர் கோவர்த்தனன், தகவல்தொழில்நுட்ப மாவட்டசெயலாளர் கே.ஏ.புஷ்பராஜ், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் கப்பல் கங்காதரன், சுற்றுச்சூழல் அணி மாவட்டஅமைப்பாளர் அமர்ஷெரீப், சிறுபான்மை மாவட்ட செயலாளர் அப்சல்பாஷா, நகரமன்ற உறுப்பினர் மாலிக், இளைஞரணி மாவட்டதுணைஅமைப்பாளர் ஏ.எம்.ரஞ்சித், நகரதலைவர் ஏ.அக்பர், நகரதுணைசெயலாளர் பொன்.சேட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story