ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

X
சிவகங்கை அருகே விட்டனேரி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அய்மம்பட்டி மற்றும் கிலுவச்சி கிராமங்களுக்குச் செல்ல சுமார் 12 மீட்டர் அகலமுள்ள மண் சாலை உள்ளது. தற்போது அந்த சாலையில் அரசு மெட்டல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த சில நபர்கள் அந்த சாலையை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளனர். மேலும் அரசின் அனுமதி இல்லாமல் ராட்சத போர்வெல் அமைத்து வருகின்றனர். இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்றி, போர்வெல் அமைக்க கூடாது என ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்
Next Story

