ஒன்றிய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய சங்கத்தினர் போராட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய சங்கத்தினர் போராட்டம்
X
ஒன்றிய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய சங்கத்தினர் போராட்டம்
ஒன்றிய அரசு கடந்த நான்கு மாதங்களாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் கூலி கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் ஒன்றிய நிதியமைச்சரிடம் பல முறை கேட்டும் இந்த தொகை மாநில அரசுக்கு ஒதுக்கப்படவில்லை. சுமார் 4000 கோடி அளவிற்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த நபர்களுக்கு வழங்க வேண்டி உள்ளது. இதனை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து இன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கைலாசம்பாளையம் தபால் நிலையம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். முறையாக 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தியும், செய்த வேலைக்கு முறையாக கூலி கொடுக்க வலியுறுத்தியும், கூலி கொடுக்காத ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன் கூறும் போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக வேலை செய்தவர்களுக்கு சம்பளம் வழங்க சுமார் 4000 கோடி ரூபாய் பணத்தை ஒன்றிய நிதி அமைச்சரிடம், தமிழக நிதி அமைச்சர் பலமுறை கேட்டும் பணம் வழங்கப் படவில்லை. இது தொடர்பாக தமிழக எம்பிக்கள் பாராளு மன்றத்தில் கேள்வி எழுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒன்றிய அரசு பணத்தை வழங்காவிட்டால் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி மாவட்ட அளவிலான போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 70 பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
Next Story