தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்
X
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக ஒடுக்கப்பட்டோர் மீதான தாக்குதல்களை தடுக்க வலியுறுத்தியும் தலித் மக்களுக்கு சமத்துவம் கோரி அமைதியான வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்க கோரியும் நாள்தோறும் கொடுக்கப்படும் வன்கொடுமைகளை தடுக்க கோரியும் தொழிலாளர் நல வாரிய முதியோர் ஊதிய ஓய்வூதியம் ஊனமுற்ற ஓய்வூதியம் இபிஎப் ஓய்வூதியம் விதவை உதவித்தொகை திருநங்கை உதவித்தொகை பூசாரிகள் நல வாரியம் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதம் 5000 வழங்க கோரியும் துவக்க வாடி பகுதியில் வசித்து வரும் எட்டு நரிக்குவர் குறவர் குடும்பங்களுக்கு மூன்று ஆண்டுகளாக வீட்டு மனை கேட்டு மனு கொடுத்தும் வீட்டுமனை வழங்காத அரசை கண்டித்தும் நாமக்கல் மாவட்டத்தில் வீட்டு மனை கேட்டு மனு கொடுத்த அனைவருக்கும் வீட்டுமனை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட தலைவர் ஜெயராமன்,சிபிஐ மாவட்ட செயலாளர் அன்புமணி, மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் குறித்து அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தேசிய செயலாளர் லெனின் கூறும் போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒடுக்கப்பட்டோருக்கு பல்வேறு அநீதிகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. விளையாட்டுப் போட்டியில் ஒரு அணிக்கு தலைமை தாங்கி நன்றாக விளையாடிய ஒருவரை பேருந்துக்குள் புகுந்து அடித்துள்ளார்கள். புல்லட் ஓட்டினார் என்பதற்காக ஒருவரது விரல்கள் துண்டிக்கப் பட்டுள்ளன. நன்றாக படித்தார் என்பதற்காக ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். தற்போது சிறார்களை வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். எனவே சமூக நீதியை காக்க செயல்படும் தமிழக அரசு இதனை கடும் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகவும் பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.
Next Story