திருச்செங்கோடு நகர ஒன்றிய திமு க பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருச்செங்கோடு நகர ஒன்றிய திமு க பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன இதில் திமுக அமைப்பு ரீதியாக பிரித்துள்ள நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் பரமத்தி வேலூர் திருச்சங்கோடு குமாரபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இருநூறு இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளில் கடந்த ஒரு வருடங்களாக திமுக ஈடுபட்டு வருகிறது தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் பி எல் ஏ 2 என்னும் வாக்குச்சாவடி அளவிலான நிர்வாகிகள்பி எல் சி எனப்படும் வாக்குச்சாவடி முகவர்களை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் சந்தித்துசட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சந்தித்து தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் அதற்கு செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள் அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செங்கோடு நகரம் மற்றும் திருச்செங்கோடு ஒன்றிய பாக முகவர்கள் மற்றும் பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது திருச்செங்கோடு வேலூர் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒன்றிய பாக முகவர்கள் கூட்டத்திற்குஒன்றிய திமுக அவை தலைவர் அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார்.ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல் முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு நகர திமுக சார்பில் சட்டயம் புதூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடந்த பாகமுகவர்கள் கூட்டத்திற்குதிருச்செங்கோடு நகர திமுக அவை தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார் நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி, திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்சேலம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார்கள் அப்போது பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை இலவச பேருந்து பயணம் மாணவர்மக்களுக்குதமிழ் புதல்வன் திட்டம் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் ஏழை எளியவர்கள் என பல தரப் பட்டவர்களுக்கும் கடந்த நான்காண்டு கால திமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இதனை பிஎல்சி உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூறிதிமுகவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் 900 முதல் 1200 வரை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் வாக்குகள் இருக்கும் அதனை நிர்வகிக்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவராக சென்று சந்தித்து திட்டங்களை எடுத்துக் கூற முடியாது என்பதனால் தான் 100 பேருக்கு ஒருவர் என்கிற அடிப்படையில் பி எல் சி உறுப்பினர்களை நியமித்துள்ளோம் அவர்கள் வீடு வீடாகச் சென்றுதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளாக மாற்ற வேண்டும்.நம்மை சித்தாந்த ரீதியாக எதிர்ப்பவர்கள் whatsapp மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக நம்மை குறித்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் இதனை பொது மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ஒவ்வொரு பாக அடிப்படையில் ஒரு whatsapp குழுவை தொடங்கி அதில் உள்ள பாக முகவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் உறவினர்கள் என குறைந்தது 10 பேரையாவது சேர்த்து ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்இந்த ஓராண்டு கால நமது உழைப்பு தான் 2026 இல் தமிழ்நாடு முதல்வர் கண்ட கனவுப் படி 200 தொகுதிகளுக்கு மேல் திமுகவை வெற்றி பெறச் செய்யும் எனக் கூறினார்கள் நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் ராஜவேல் ஆயழக அணி துணை செயலாளர் முன்னாள் மாணவர் அணி அமைப்பாளர் ஜிஜேந்திரன் சார்பணி நிர்வாகிகள் சசி நல்லசிவம் நந்தகுமார் தாமரைச்செல்வன்மற்றும் நகர திமுக ஒன்றிய திமுக நிர்வாகிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் என இரண்டு கூட்டங்களிலும்திருச்செங்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட 84 வாக்குச்சாவடிகளை சேர்ந்த பிஎல் எ 2 உறுப்பினர்கள் 93 பேர் பி எல் சி உறுப்பினர்கள் 693 பேர்,திருச்செங்கோடு நகரத்தைச் சேர்ந்த 87 வாக்குச் சாவடிகளை சேர்ந்த எண்பத்தி ஏழு பிஎல் எல்ஏ 2உறுப்பினர்கள் 700 பி எல் சி உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story