கோன் நூல் வியாபாரிகள் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடந்தது

X
Pallipalayam King 24x7 |24 March 2025 5:24 PM ISTரத்ததான முகாம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றம்
பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியில் கோன் நூல் வியாபாரிகள் சங்க வருடாந்திர பொதுக்குழு கூட்டமானது நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்கத்தின் தலைவர் தங்கராஜ், துணைத் தலைவர் ஜானகிராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். செயலாளர் சம்பு வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். துணைச் செயலாளர் பச்சியப்பன் அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் ஆர்.பி.சக்திவேல் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். நாளுக்கு நாள் மனித ரத்தத்தின் தேவை அதிகரித்து வருவதால், அதை ஈடு கட்டும் வகையில் சங்கத்தின் சார்பாக வருடத்திற்கு ஒருமுறை ரத்ததான முகாமை நடத்துவது, அதில் ஏராளமானோரை பங்கேற்க வைப்பது, சங்கத்திற்கு புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
Next Story
