பெரிய குளம் அருகே ஊராட்சி மின் மோட்டார் வயர் திருட்டு

X
பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக ஊராட்சி ஊழியர்கள் கடந்த 20ஆம் தேதி மோட்டாரை இயக்க சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது மோட்டாரின் 65 அடி நீளம் உள்ள வயர் திருடப்பட்டிருந்தது தெரிகிறது. ஊராட்சி செயலாளர் பிச்சைமணி அளித்த புகாரில் பெரியகுளம் போலீசார் நேற்று (மார்.23) வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

