போக்சோ குற்றவாளி விமான நிலையத்தில் கைது 

போக்சோ குற்றவாளி விமான நிலையத்தில் கைது 
X
இரணியல்
குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே கிணற்றடி விளை பகுதியில் சேர்ந்தவர் தனுஷ் (39). இவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் சேர்ந்த அப்போது பன்னிரண்டு வகுப்பு படித்து வந்த மைனர் சிறுமியை அத்து மீறியதாக இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் தனுஷ் வெளிநாடு தப்பித்து சென்றார்.        இதனை அடுத்து போலீசார் இந்திய குடியுரிமை அலுவலகத்தில் தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய தனுஷ் அங்கு கைது செய்யப்பட்டார். இந்த தகவல் இரணியல் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது.       போலீசார் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சென்று தனுஷை இரணியல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். பத்து வருடங்களுக்கு பிறகு தலைமறைவு போக்சோ குற்றவாளி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story