பைக்குகளை இடித்து தள்ளிய வேன் டிரைவர் கைது

பைக்குகளை இடித்து தள்ளிய வேன் டிரைவர் கைது
X
குளச்சல்
குமரி மாவட்டம் குளச்சல் அருகே கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (34) தனியார் நிறுவனத்தில் மார்க்கெட் வேலை பார்க்கிறார்.  நேற்று மாலை வேலை விஷயமாக லட்சுமிபுரம் பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அவருடன்  நண்பர் ஒருவரும் மற்றொரு பைக்கில் சென்றார். 2 பேரும் பைக்குகளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றனர்.       அப்போது திங்கள்நகரிலிருந்து குளச்சல் நோக்கி ஒரு கூண்டுவேன் வேகமாக வந்தது. அந்த வேன் தாறுமாறாக ஓடியதால் பொதுமக்கள் சிதறி ஓடினர். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்கில் இடித்து தள்ளி, அருகில் ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவர் மீது மோதி நின்றது.       இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. விபத்து உண்டாக்கிய வேன்  தனியார் பார்களுக்கு பொருட்கள் எடுத்துச் செல்ல பயன்படுத்துவது தெரிய வந்தது. வேனை தேனி மாவட்டம் உத்தம பாளையத்தை சேர்ந்த டிரைவர் கதிரவன் (24) என்பவர் ஒட்டி வந்துள்ளார். அவரை பொதுமக்கள் பிடித்து குளச்சல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story