அரசு உயர்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

பள்ளி வளாகத்தில் சார்பு நீதிபதி மஹேந்திரவர்மன் ஒரு. மரக்கன்று நட்டு வைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
பெரம்பலூர் வட்டம் செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரம்பலூர் சிவம் அறக்கட்டளை சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/சார்பு நீதிபதி மஹேந்திரவர்மன் தலைமை தாங்கினார் ‌ செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் முன்னிலை வகித்தார்.தலைமை சட்ட பாதுகாப்பு வழக்கறிஞர் சிராஜூதீன், சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் தினேஷ் ஆகியோர் சட்ட கருத்துரைகளை வழங்கினர். பள்ளி வளாகத்தில் சார்பு நீதிபதி மஹேந்திரவர்மன் ஒரு. மரக்கன்று நட்டு வைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சிறப்புரை ஆற்றினார் பெரம்பலூர் இந்தோ அறக்கட்டளை செல்வகுமார், செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவானந்தம் உட்பட பள்ளி மாணவர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். . முன்னதாக பெரம்பலூர் சிவம் அறக்கட்டளை நிறுவனர் சிற்றம்பலம் வரவேற்புரை ஆற்றினார். இறுதியில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை செங்குணம் குமார் அய்யாவு நன்றி கூறினார். இந்த விழிப்புணர்வு முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
Next Story