நன்செய் இடையாறு அக்னி மகா மாரியம்மன் கோயில் தீமிதி விழா.

நன்செய் இடையாறு அக்னி மகா மாரியம்மன் கோயில் தீமிதி விழாவில் பல்லாயிறக்கணக்கானோர் தீ மிதித்தும், பூ வாரிக்கொட்டிக் கொண்டும் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
பரமத்தி வேலூர், மார்ச். 24: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற நன்செய் இடையாறு அக்னி மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கம்பம் நட்டு காப்புகட்டுதலுடன் திருவிழா துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் பக்தர்கள் காவிரியிலிறுந்து புனித நீர் எடுத்துவந்து ஊற்றி வழிபட்டனர். 15ம் தேதி மறு காப்பு கட்டுதலும்,அன்று இரவு முதல் 22 ம் தேதி வரை அம்மன் தினந்தோறும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.23 ம் தேதி இரவு வடிசோறு படைத்தல் நிகழ்ச்சியும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழாவையொட்டி இன்று அதிகாலை (திங்கட்கிழமை) கோயில் முன்பு 62 அடி நீளமுள்ள பூ குண்டம் வெட்டப்பட்டு பூ (தியை முற்பட்டது) போடப்பட்டது. அதனை தொடர்ந்து பகல் மூன்று மணியலவில், ராஜா சாமி கோயிலில் வளாகத்தில் இருந்து மணிவேல் புறப்பட்டு மாரியம்மன் கோயிலை வந்தடைந்ததும் தீமிதி விழா தொடங்கியது. தமிழகத்திலேயே மிக நீளமான பூக்குண்டமாக கருதப்படும் நன்செய் இடையாறு மாரியம்மன் குண்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் தீ மிதித்தும், ஆயிரக்கணக்கான பெண்கள் பூ வாரிகொட்டிக் கொன்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும்,மாலை மாவிளக்கு பூஜை மற்றும் அழகு போடுதல், அக்னிசட்டி எடுத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. நாளை (புதன்) காலை கம்பம் ஆற்றில் விடுதலும், மஞ்சள் நீராடல் விழாவும் நடைபெறுகிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் எட்டுபட்டி ஊர் தர்மகர்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story