வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் ரீசார்ஜ் செய்யும் போது தீப்பிடித்து எரிந்த வாகனம்

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சார்ஜ் செய்யும் போது திடீரென தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம், அருகில் இருந்த மற்றொரு இருசக்கர வாகனமும் தீயில் எரிந்து நாசம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட காஜாநகர் பகுதியை சேர்ந்தவர் சபீக் அஹமது தொழிலதிபரான இவர், தனது மின்சார இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்துவிட்டு, இன்று வீட்டிற்கு கொண்டு வந்து சார்ஜ் செய்யும் போது, திடீரென சபீக் அஹமதுவின் மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது, உடனடியாக அருகில் இருந்த மற்றொரு இருசக்கர வாகனத்திற்கும் தீ பரவிய நிலையில், இரண்டு இருசக்கர வாகனமும், தீயில் எரிந்து நாசமாகின, உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.. இந்நிலையில், சர்வீஸ் செய்து எடுத்துவரப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் சார்ஜ் செய்யும் போது, தீப்பற்றி எரிந்து, மற்றொரு இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Next Story

