ஆயுதப்படை குடியிருப்பில் ஆபாச நடனம்

X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்ற நிலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆபாச ஆடல் பாடல் நடைபெற்றது தரிசனம் செய்ய வந்த பக்தர்களை முகம் சுழிக்க செய்தது. ஏற்கனவே கோவில் திருவிழாக்களில் ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததுடன் ஆடல் பாடல் தொழிலாளர்களின் நலன் கருதி பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடித்து நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தது. இது குறித்து காவல்துறை ஆணையரே பல்வேறு நெறிமுறைகளை வகுத்து அறிவித்தனர். அது மட்டுமில்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றமும் கோவில் திருவிழாக்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பக்தி பாடகள் மட்டுமே ஒலிபரப்ப வேண்டும் என்றும் ஆபாச நடனங்கள் எதுவும் கோவில் திருவிழாக்களில் நடத்தக்கூடாது என்றும் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் அதனை அமல்படுத்த வேண்டிய காவல்துறையினரின் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் தினசரி தரிசனம் செய்யும் மகா மாரியம்மன் கோவிலிலேயே ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை கண்ட, தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் முகம் சுழித்து சென்றனர்
Next Story

