தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
X
கைது
கபிஸ்தலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 225 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் உத்தரவின் பேரில், பாபநாசம் காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேலு அறிவுறுத்தலின்படி கபிஸ்தலம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட கடைகள், வா்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்யப்படுகிா என போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். அதில், கபிஸ்தலம் பாலக்கரை பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சுரேஷ் (52) என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷ் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 225 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், சுரேஷ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனா்.
Next Story