உலக காசநோய் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்.

உலக காசநோய் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்.
X
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் நடைபெற்ற நிகழ்ச்சிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்துகொண்டு உலக காசநோய் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
உலக காசநோய் தினமானது இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது உலகின் பல்வேறு இடங்களில் காசநோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்களின் வாழ்வியல் முறைகளை எடுத்துக் கூறும் வகையிலும் அவர்கள் காது நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் உலக காசநோய் தின அனுசரிக்கப்படுகிறது. காசநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் காச நோயால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையிலுமாக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன் சந்திரன் கலந்து கொண்டு காசநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
Next Story