மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

X

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். இன்று மாவட்ட ஆட்சியர் மோகன் சந்திரன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்கினர். குடும்ப அட்டை, பட்டா மாற்றுதல், முதியோர் உதவித்தொகை, மருத்துவ காப்பீட்டு சேவை, அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து பல்வேறு மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர் மனுக்கள் மீது குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Next Story