மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்.

X

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் திட்டங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருமுனை பிரச்சாரம் மற்றும் கலை நிகழ்வுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தின்கீழ் இன்றைய தினம் (24.03.2025) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் மனோலயம் ஹெல்த் கேர் ட்ரஸ்ட் கூத்தாநல்லூர் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அனைத்து ஒன்றிய பேருந்து நிலையங்களிலும் விழிப்புணர்வு கலை நிகழ்வுகள் மற்றும் தெருமுனை நாடகங்கள் நடத்திட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
Next Story