மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

X
திருச்சி தென்னூர் காவல்கார தெருவை சேர்ந்த ஜான் போஸ்கோ மகன் நிம்மல் ஜோஸ் (வயது 20). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செல்போன் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று நிம்மல் ஜோஸ் தனது மோட்டார் சைக்கிளில் தென்னூர் உழ வர் சந்தையில் இருந்து கோர்ட்டு சாலை வழியாக எம்.ஜி.ஆர். சிலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் டைந்த நிம்மல் ஜோஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புல னாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிம்மல் ஜோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

