தாராபுரம் பேருந்து நிலையத்தில் கோதை ஆசாமிகளால் பொதுமக்கள் அவதி

தாராபுரம் பேருந்து நிலையத்தில் கோதை ஆசாமிகளால் பொதுமக்கள் அவதி
X
தாராபுரம் பேருந்து நிலையத்தில் கோதை ஆசாமிகளால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 80-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட் டங்களில் இருந்து திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 100-க்கு மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். பஸ் வெளியே செல்லும் பகுதி எதிரே அரசுக்கு சொந்தமான மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு குடிமகன்கள் மது அருந்திவிட்டு பஸ்நிலையம் அருகே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள திட்டில் படுத்து உறங்குகின்றனர். சில நேரங்களில் அதிக குடிபோதையில் தவறி சாலையில் விழுந்து கிடக்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும் பஸ்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் இருசக்கர வாகன போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் குடிபோதையில் படுத்து கிடக்கும் குடிமகன்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், பஸ் நிலையத்தின் எதிரே உள்ள மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story